தமிழத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்: ராகுல்காந்தி 2-வது நாளாக தேர்தல் பரப்புரை..!!

திருப்பூர்: தமிழக மக்களை வாட்டி கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலை போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்கள் இடையே ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். தமிழகத்தில் ராகுல்காந்தி 2-வது நாளாக தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார். இந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: குறிப்பாக நான் இங்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சியினர் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலனுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் ஆளுகின்ற மோசமான ஆட்சியை மோடி அவர்கள், கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர் என அவர் தெரிவித்தார். தமிழக அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது நடக்காது என ராகுல் காந்தி பிரச்சாரத்தில் கூறினார்.

தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை. இன்று தமிழக மக்களை வாட்டி கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலை போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தற்போது நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தின் உரிமைகளை மத்திய பாஜக ஆட்சியிடம் இந்த அரசு அடகு வைத்துவிட்டது. நானும் தமிழன் தான், மேலும், நீங்கள் எனக்கு காட்டிய பாசத்திற்கும் வரவேற்பிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: