தாவரவியல் பூங்காவில் சைக்ளமின் மலர் கண்களுக்கு விருந்து

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சைக்ளமின் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்து வருகிறது. மே மாதம் நடக்கவுள்ள மலர் காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்காவில் தற்போது நாற்று நடவு பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் அல்லிச் செடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. புல் மைதானங்களும் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி புல் தரைகளும், செடி கொடிகள் மட்டுேம தற்போது காட்சியளிக்கிறது.

பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சீனாவின் அரசி எனப்படும் பவுலோனியா மலர்களே காட்சியளித்து வருகிறது. எனினும், இவ்வகை மரங்கள் மரத்தில் பூக்கும் நிலையில் அதன் அருகே நின்று புகைப்படங்கள் எடுக்க முடிவதில்லை. அதேசயம் பூங்கா கண்ணாடி மாளிகையில் சைக்ளமின் மலர்கள் பூத்துள்ளன. பூங்காவில் மலர்களே  இல்லாத நிலையில், கண்ணாடி மாளிகையில் உள்ள சைக்ளாமின் மலர்கள் சுற்றுலா  பயணிகளை கவர்ந்து வருகிறது. அதன் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories:

>