'எழுந்து நடக்கிறார் சசிகலா': உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை..!

பெங்களூர்: சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சசிகலாவுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதாவது காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறை போலீசார் அனுமதித்தனர். அங்கு அவரது நுரையீரல் நிலை குறித்து சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடிவில், சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது சசிகலா ரத்தத்தில் 97 சதவிகிதம் ஆக்சிஜன் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ளது. சசிகலா எழுந்து நடப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>