×

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதல்வர்  பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தளர்வுகள் குறித்த அடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும், பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள சூழலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,district collectors ,Tamil Nadu , Tamil Nadu, Curfew, Chief Minister Palanisamy, Advice
× RELATED மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு...