×

அறநிலையத்துறையை மிரட்டும் மோசடி பேர்வழிகள்: அதிகார மையமாக மாறுகிறார்களா?; பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல்

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்க வசதியாக இந்து சமய அறநிலையத்துறை கடந்த 1959ல் ஆணையரின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு கொண்டதாக உருவாக்கப்பட்டது. இதன் மூலம், கோயில் நிலங்கள், நகை, உடைமைகளை சட்டவிரோதமாக கையகப்படுத்த முயற்சிக்கும் தனியாரிடம் இருந்த கோயில்கள் மற்றும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கோயில்களை மீட்டு அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்படி தற்போது வரை 44,120 கோயில்கள் அறநிலையத்துறை வசம் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் கோயில்கள் எண்ணிக்கை என்பது உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில செயல் அலுவலர்களால் கோயில் நிலங்கள் தனியாருக்கு பெயர் மாற்றம், கோயில் நகைகள், சிலைகள் மாயமாவது, உண்டியல் பணம் கையாடல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் அறநிலையத்துறை நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதை பயன்படுத்தி கொண்டு, அறநிலையத்துறையை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க போகிறோம் எனக்கூறியும், முறைகேடுகளை தட்டிகேட்க போவதாக கூறி ஒரு சில ேமாசடி பேர் வழிகள் பக்தர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது போன்று லட்சக்கணக்கில் அவர்கள் பணம் வசூல் செய்கின்றனர். அவர்கள், தாங்கள் வசூலிக்கும் பணத்துக்கு எந்தவிதமான ரசீதும் வழங்குவதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு ஒரு சிலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களுக்கு அறநிலையத்துறையில் பணிபுரியும் ஒரு சில அலுவலர்களே ஆதரவாக ெசயல்படுகின்றனர். அவர்கள், தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை மோசடி பேர்வழிகளை வைத்து மிரட்டுகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஆணையர் அலுவலக உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கண்டு அஞ்சும் நிலை தான் உள்ளது.

 குறிப்பாக, கடந்த சில நாட்களாக ஒரு சில அதிகாரிகள் மீது சிலை, நகை மாயமான விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த குற்றச்சாட்டு அவர்கள் மீது உறுதி செய்யப்படவில்லை. இதனால், அவர்கள் மீதான நடவடிக்கையை கூட அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அந்த அதிகாரிகளை மோசடி பேர்வழிகள் மிரட்டி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் ஆணையர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள்  உயர் அதிகாரியை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக்ககூடாது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இதை எந்த அதிகாரியும் தட்டி கேட்காத நிலையில், அந்த உயர் அதிகாரி கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதே போன்று, அதிகார மையத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவர்களை பதில் பேச விடாமல் மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு பயந்து போன உயர் அதிகாரிகள் தற்போது ஒதுங்க விட்டனர்.

மேலும், அவர்கள் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒரு சிலர் அறநிலையத்துறையை மிரட்டி வருகின்றனர். அவர்கள், தற்போது ஒவ்வொரு கோயில் நிர்வாகம் விவகாரத்தில் தலையிட்டு வருகின்றனர். இதனால், அறநிலையத்துறையின் அதிகார மையமாக மோசடி பேர்வழிகள் மாறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, மோசடி பேர்வழிகளை சமாளிக்க திறமையான உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அறநிலையத்துறையில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : center ,Treasury ,public ,millions , Fraudulent bigwigs intimidating the Treasury: becoming a center of power ?; Collecting millions of dollars from the public
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்