நெல்லையில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேட்டி பாஜ இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம்

நெல்லை, ஜன. 24: நெல்லை வண்ணார்பேட்டையில் மஜகவின் தலைமை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அளித்த பேட்டி: சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜ அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற போவதில்லை. கொள்கையும், உழைப்பும் பலன் இழக்கக் கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அமையும். சசிகலா பூரண உடல் நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சசிகலாவின் உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் சசிகலாவின் உடல்நிலை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்  மத்திய அரசுகளால் தமிழர்கள் நடத்தப்படுகிறார்கள். விவசாயிகள், மீனவர்களுக்காக மதிமுகவின் போராட்டத்திற்கு மஜக முழு ஆதரவு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>