புதுவை பாஜகவில் பெண் தாதா: முதல்வர் விசாரணைக்கு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி  நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரவுடிகளையும், குண்டர்களையும் பா.ஜ.க. தங்களது கட்சியில் இணைத்து வருகின்றனர். தேடப்படும் குற்றவாளியான எழிலரசி, பா.ஜ.க.  முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்த டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படையினரும், கடலோர காவல் படையினரும் தாக்குதல் நடத்துவதை நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு, மத்திய அரசு உரிய கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Related Stories:

>