மழையால் 10 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு மனமுடைந்த விவசாயி ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாகை: நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (58). இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு அரவிந்த் (24), ஹரிஷ்கிருஷ்ணா (17) ஆகிய 2 மகன்கள் உண்டு. ரமேஷ்பாபுக்கு மோகனம்பாள்புரத்தில் 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர. 3 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் வடக்கு பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வலிவலம் கனரா வங்கி ஆகியவற்றில் விவசாய கடன்களை ரமேஷ்பாபு வாங்கியுள்ளார். நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதமாக பெய்த மழையால் 10 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியது. இதனால், மன வேதனை அடைந்து பயிர் கடனை எப்படி அடைக்க போகிறேன் என்று புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் ேநற்று, ஆவராணி-புதுச்சேரி  ரயில்வே கேட் அருகே எர்ணாகுளத்தில் இருந்து நாகை வழியாக காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

Related Stories:

>