×

சமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்தது யானை மீது தீப்பந்தம் வீசியவர்கள் அனுமதியின்றி விடுதி நடத்தினர்: குண்டர் சட்டம் பாய்கிறது

ஊட்டி: ஊட்டி அருகே மசினகுடியில் தனியார் விடுதி வளாகத்திற்குள் ஒரு காட்டு யானை சென்றது. அதை விரட்டுவதற்கு தீப்பந்தத்தை வீசினர். இதில் காதில் தீப்பிடித்து உயிரிழந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியரான ரேமண்ட் டீன், பிரசாத் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். விடுதிக்கும் சீல் வைத்தனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் கூறுகையில், ‘‘யானைக்கு தீ வைத்தது தொடர்பாக மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : hostel , The social website betrayed Those who threw fireballs at the elephant Accommodation without permission: The law of thugs flows
× RELATED காதலை ஏற்காததால் ஆத்திரம்: மாணவி...