தொழில்துறை சீரழிவு பற்றி ராகுலிடம் கதறிய தொழிலதிபர்

கோவை: கோவையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று குறுந்தொழில்முனைவோருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, ராகுல்காந்தி முன்னிலையில் சென்ைனயில் இருந்து வந்த குறுந்தொழில்முனைவோர் கே.இ.ரகுநாதன் பேசியதாவது: நான், 35 வருடமாக குறுந்தொழில்முனைவோராக உள்ளேன். 3,500 குறுந்தொழில் முனைவோர் அடங்கிய சங்கம் சார்பில் இங்கு பேச வந்துள்ளேன். இன்றைய தொழில்துறை நிலை என்ன? ஸ்கில் இந்தியா, மேக்கின் இந்தியா, டிஜிட்டில் இந்தியா எல்லாம் இன்றும் தலைகீழாக மாறிவிட்டது. இவற்றில் இருந்து புறம்தள்ளப்பட்டு விட்டோம். 7 கோடி தொழில்முனைவோர்களில் இன்று 30 சதவீதம் பேர் தங்களது தொழிலை கைவிட்டுவிட்டு ெவளியேறி விட்டனர். அதாவது, 2.10 கோடி பேர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர்.

இவர்கள், 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தனர். அத்தனை பேரும் தற்போது வேலையிழந்து விட்டனர். யாரும் இவர்களை பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே. தயவுசெய்து மறந்துவிடாதீர்கள். நான், எனது நிலையை சொல்லி அழுதுகொண்டே இருந்தால், எனக்கு யாரும் ஆர்டர் கொடுக்க மாட்டார்கள். எனது தேச வளர்ச்சியில் எனக்கு 35 ஆண்டு காலம் பங்கு உள்ளது. ஆனால், எங்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. எனவே, எங்களை காப்பாற்றுங்கள். கைவிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார் இவரது பேச்சின் மூலம், தொழில்துறையின் இன்றயை அவலம் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது என ராகுல்டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: