சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், விவேகானந்தர் பள்ளி தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (31). தனியார் கம்பெனி சூபர்வைசர். இவருடன் வேலை செய்யும் நண்பர் வேம்பு (36) என்பவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். வேம்பு, தனது உறவினரின் 15 வயது மகளை வளர்க்கிறார். இதையொட்டி,  ராமசந்திரன்  வேம்பு வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நிலை பாதித்தது. அவரை, மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசந்திரனை ைகது செய்தனர்.

Related Stories:

>