டியுசிஎஸ் அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டில் ரூ.2.14 லட்சம் சிக்கியது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஊரக கூட்டறவு சங்க நிர்வாக இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும், தாம்பரம் மற்றும் கொடுங்கையூர் பெரியார் நகரில் உள்ள டியுசிஎஸ் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவு வரை நடந்தது. இந்தச் சோதனையில் தலைமை அலுவலகத்தில் விற்பனை உதவியாளர் சரவணன் என்பவரிடம் இருந்து ரூ.1.59 லட்சமும், தாம்பரம் மற்றும் பெரியார் நகரில் 54 ஆயிரத்து 370 ரூபாயும் சிக்கியது. மொத்தம் ₹2.14 லட்சம் சிக்கியது. கணக்கில் வராத அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>