சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் வரும் 27ம் தேதி சென்னை வருகின்றனர்.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய இந்திய அணி இளம் வீரர்கள் சிராஜ், நடராஜன், கில், சுந்தர், தாகூர், சைனி ஆகியோருக்கு தலா ஒரு ‘தார்’ மாடல் கார் பரிசளிக்க உள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

* தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஸ்பெயின் நட்சத்திரம் கரோலினா மரின் தகுதி பெற்றுள்ளார்.

* சர்வதேச டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் உடல்தகுதியை உறுதி செய்வதற்காக, வேகப் பந்துவீச்சாளர்கள் 2 கி.மீ. தூரத்தை 8 நிமிடம், 15 விநாடியிலும், மற்ற வீரர்கள் இதே தொலைவை 8 நிமிடம், 30 விநாடியிலும் கடக்க வேண்டும் என பிசிசிஐ புதிய விதிமுறை வகுத்துள்ளது.

* இங்கிலாந்து வேகம் ஆண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 30வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Related Stories:

>