×

தங்களிடம் உடல் ஒப்படைக்கவில்லை!: தங்கச்சிமடம் அருகே மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல்..!!

ராமநாதபுரம்: தங்கச்சிமடம் அருகே மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் உடல்களுக்கு மரியாதை செலுத்த ஏராளமானோர் தங்கச்சிமடத்தில் காத்திருந்தனர். தங்களிடம் உடல்களை ஒப்படைக்காமல் சொந்த வீட்டுக்கு கொண்டு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இலங்கை கப்பல்கள் மோதி இறந்த 4 மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டுவரப்பட்டது.

Tags : Relatives ,fishermen ,road ,Thangachimadam , Goldsmith, Fisherman, Relatives, Road Stir
× RELATED ரவுடி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு