வீட்டின் முன்பு கோலம் போட்ட 14 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் 14 வயது சிறுமி ஒருவர் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது,  அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் அந்த சிறுமியின் வாயை பொத்தி  தூக்கிச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதனையடுத்து, சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விக்னேஷ் என்ற வாலிபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>