×

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பெண் காவலருடன் ஒரே வீட்டில் இருந்த காரணத்துக்காக ஆண் காவலரை பணிநீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. காவலர் சரவணபாபுவின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2 பேரும் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற காரணத்துக்காக துறைரீதியான நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பெண் காவலருடன் தவறான கண்ணோட்டத்துடன் சரவணபாபு இருந்ததாக கூறி ஆயுதப்பிரிவு ஐ.ஜி. பணிநீக்கம் செய்தார்.

Tags : court ,police officer , Disciplinary action, police, dismissal order, cancellation, iCourt
× RELATED நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக...