இந்திய அணி வீரர்களோடு ஒப்பிடும்போது, நமது இளம் வீரர்கள் எல்கேஜி மாணவர்கள்.: கிரேக் சேப்பல் காட்டம்

கான்பெரா: இந்திய அணி வீரர்களோடு ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரர்கள் எல்கேஜி படிக்கும் மாணவர்களாகத் தான் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கட்டுரையை பின்வருமாறு காண்போம்.

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணி அனைத்து வகையிலும் தேர்ந்ததாக உள்ளது. இந்திய அணிக்குள் வந்தாலே கிடைக்கும் வாய்ப்பில் தங்களை நிரூபிக்கவும், அணியை வெற்றி பெற வைக்கவும் முயல்கிறார்கள். மேலும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கிரிக்கெட் வீரர்களுக்குச் செலவிடும் தொகைக்கான இடைவெளி வளைகுடா அளவில் இல்லை. அதற்கும் அதிகமாக இந்தியப் பெருங்கடல் அளவுக்கு இடைவெளி இருக்கிறது.

பிசிசிஐ கோடிக்கணக்கில் வீரர்களை உருவாக்குவதில் செலவிடுகிறது. ஆனால், பிசிசிஐ அமைப்போடு ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிக்கு 4.40 கோடி டாலர்கள்தான் செலவிடுகிறது. மேலும் கடினமான போட்டிகளில் விளையாடி, இந்திய அணியினர் நெருக்கடிகளை, அழுத்தங்களைச் சமாளிக்கும் திறமையோடு இருக்கிறார்கள்.

இந்த ஆழம் வலைப்பயிற்சியிலும், வலுகுறைந்த அணிகளுக்கு எதிராகவும் எதிரொலிக்காது. எந்த மாதிரியான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தியாவில் உள்ள 38 உள்நாட்டு முதல் தர அணியே உதாரணங்களை வழங்கும். மேலும் நம்முடைய நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலவீனமான போர் வீரர்களாகவே இருக்கிறார்கள். இந்திய வீரர்களோடு ஒப்பிடும்போது, நமது இளம் வீரர்கள் 16 வயதுக்குக் கீழ் உள்ள அணியில் விளையாடும் வீரர்களைப் போல், எல்கேஜி மாணவர்கள்போல்தான் இருக்கிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானுமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

Related Stories: