×

வடலூரில் மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

நெய்வேலி:வடலூர் ரயில்வே கேட் அடுத்த பாலாஜி நகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உழவர் சந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சந்தையில் சுமார் 20க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உழவர் சந்தை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மூடியே கிடக்கிறது. தற்போது   ஐந்துக்கும் குறைவான விவசாயிகளே வந்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். வடலூர் சனிக்கிழமை அன்று நடைபெறும் வார சந்தையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால் உழவர் சந்தை இருந்தும் பொதுமக்கள் யாரும் வருவதில்லை. போக்குவரத்து வசதி இருந்தும் இந்த உழவர் சந்தை மூடிக்கிடப்பதால் பொதுமக்களின் நலன் கருதி வடலூர் பேரூராட்சி அதிகாரிகள் உழவர் சந்தையின் தரத்தை உயர்த்தி அனைத்து தரப்பினரும் வந்து செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



Tags : Vadalur , Closed in Vadalur For use in the farmer's market Public request to bring
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை