வரகு கதம்பம்

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை 2 விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த துவரம்பருப்பை நன்கு கடைந்து, வெந்த காய்கறிகள், சாம்பார் பொடி, பச்சைப்பட்டாணி, உப்பு, புளிக்கரைசல் போட்டு கலந்து கொள்ளவும். வரகை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி கடுகு தாளித்து சாம்பார் கலவையை கொட்டி கொதிக்க வைத்து மசித்த வரகு, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.