ஏழைகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்: மத்தியமைச்சர் கிரிராஜ் பேட்டி.!!!

மானாமதுரை: மீனவர்கள் மற்றும் ஏழைகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்  தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் நிறுவனத்தில் மேம்பட்ட கடல்பாசி இயற்கை குருணை உரத்தை அமைச்சர் கிரிராஜ் சிங் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து, பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி ஆலையை திறந்து வைத்த அமைச்சர் கிரிராஜ் சிங், 10 கோடி ரூபாய் மதிப்பிலான சாகரிகா விரிவாக்கம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ஆல்கடல் பாசி வளர்ப்பிற்காக 10 லட்சம்  மதிப்பிலான விசைப்படகுகளை மகளிர் 3 பேருக்கு வழங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மீனவர்கள் மற்றும் ஏழைகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி  செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். கடல்பாசி தொழில் மூலம் ஒவ்வொரு தனிநபரும் மாதம் குறைந்தப்பட்சம் 20,000 ரூபாய் ஈட்ட வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

இதனைபோல், ராமேஸ்வரம் குந்துகால் துறைமுகத்தில் இரண்டு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து,  அமைச்சர் கிரிராஜ் சிங் ராமேஸ்வரம் குந்துக்கால் துறைமுக பகுதியில் படகில் சிறிது தூரம் பயணித்தார்.

Related Stories:

>