மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.31 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை!: மர்மநபர்களுக்கு போலீசார் வலை..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மன்னப்பந்தலில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் ரூபாய் 31 லட்சம் வைர, தங்க, வெள்ளி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ராமதாஸ் - மல்லிகா தம்பதியின் வீட்டு பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், ரூபாய் 8 லட்சம் வைர நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூபாய் 3 லட்சத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>