×

மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் .: விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: பிரபல கிறித்தவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பிரபல கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன், இயேசு அழைக்கிறார் மத பிரச்சார கூட்டம், காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

இதில் இயேசு அழைக்கிறார் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததா எழுந்த புகாரின் அடிப்படையில், பால் தினகரனக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட ‘இயேசு அழைக்கிறார்’ பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் 3-வது நாட்களாக  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்த சோதனை தற்போது நிறைவுபெற்றுள்ள நிலையில் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி பால் தினகரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Paul Dhinakaran ,hearing , Income Tax Department summons religious pastor Paul Dhinakaran: Order to appear in person for hearing
× RELATED பால் தினகரன் குழுமத்தில் 5 கிலோ தங்க...