பாம்பனில் விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு

பாம்பனில் விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. கடல் பகுதியிலிருந்து கரும்புகை கிளம்பியதால் மீனவர்கள் படகு எரிவதை கண்டனர். கடற்கரையில் இருந்த மீனவர்கள் படகுகளை எடுத்து கடலுக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

படகில் கடுமையான தீப்பற்றி எரிய மீனவர்கள் அருகிலிருந்த படகுகளில் விருந்து மோட்டார் மூலம் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். எரிந்த விசைப்படகு பாம்பன் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேல் பாக்கியம் என்பவருக்கு சொந்தமான படகு. அதிகாலை 6 மணி அளவில் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டது அதன் பின்னர் படகில் தீப்பற்றி எரிந்தது என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் மேற்பகுதிகள் எரிந்து சாம்பலானது. தீ விபத்தால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>