×

கூட்டுறவு அங்காடிகளில் திடீர் ரெய்டு கணக்கில் வராத 2 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னையில் கூட்டுறவு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரத்து 235 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழக அரசின் கூட்டுறவு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவல்லிக்கேனி  கூட்டுறவு அங்காடி சோதனையில் விற்பனை உதவியாளர் சரவணனிடம் இருந்து ₹1,59,865 மற்றும் தாம்பரம், பெரியார் நகர் கூட்டுறவு அங்காடிகளில் 54,370 என மொத்தம் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரத்து 235 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.Tags : raid ,shops , 2 lakh unaccounted for raid on co-operative stores
× RELATED கொள்ளிடம் பகுதி நேரடி கொள்முதல்...