காடிசன்- சிங்கர் சிக்கலை தீர்த்த இந்திய கணக்கு புலி ஸ்ரீவத்சாவுக்கு விருது: பல ஆண்டு பிரச்னையை தீர்த்து சாதனை

வாஷிங்டன்: நீண்ட காலம் தீர்க்கப்படாத காடிசன் - சிங்கர் கணிதத்திற்கும், ராமானுஜன் வரைபடத்திற்கும் தீர்வு கண்ட இந்திய கணிதவியலாளர் நிகில் வத்சவா உள்ளிட்ட 3 பேர், அமெரிக்காவில் மைக்கேல் அண்ட் ஷீலியா ஹெல்டு  விருதுக்கு தேர்வாகி உள்ளனர். குவாண்டம் மெக்கானிக்சுடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடுகளுக்கு கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகியோர் கடந்த 1959ம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளியிட்டனர். இந்த  கோட்பாட்டிற்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமலேயே இருந்தது. சிக்கலான இந்த கணிதத்திற்கு இந்தியாவை சேர்ந்த நிகில் ஸ்ரீவத்சவா தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இவரோடு அமெரிக்காவின் ஆடம் மார்க்கஸ், யேல் பல்கலைக்  கழகத்தின் டேனியல் ஸ்பீல்மன் ஆகியோரும் காடிசன்-சிங்கர் மற்றும் ராமானுஜன் வரைபடத்திற்கு தீர்வு கண்டுள்ளனர்.

இதற்காக இவர்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு கணித விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது 2021ம் ஆண்டுக்கான, ‘மைக்கேல் அண்ட் ஷீலியா ஹெல்டு’ விருதுக்கு மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இம்மூவரின் கண்டுபிடிப்பும் அடுத்த தலைமுறை கணினி அறிவியலாளர்களை ஊக்கப்படுத்தும் என விருது வழங்கும் குழுவினர் கூறி உள்ளனர். விருது பெறும் மூவருக்கும் ரூ.74 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

Related Stories:

>