ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டதலைவர் சு.பரணி தலைமை  வகித்தார், மாவட்ட துணை தலைவர் கன்னியப்பன், இணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குணசேகரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சார்லஸ் சசிகுமார் ஆகியோர் கலந்து  கொண்டனர். இதில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் மிஷன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்   உள்பட வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மீதான நெருக்கடியை கைவிட  வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>