சென்னை: இலங்கைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே நடுக்கடலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டு படகுகள் மூலம் 100 கிலோ ஹெராயின் மற்றும் 18 கிலோ மெத்தபெட்டமைனை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 6 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது இலங்கையை சேர்ந்த சர்வதேச குற்றவாளியான நவாஸ் மற்றும் முகமது ஹப்னாஸ் என தெரியவந்தது. இவர்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், மாலத்தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களை நடுக்கடலிலேயே கப்பலில் மாற்றி வியாபாரம் செய்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளிநவாஸ் மற்றும் முகமது ஹப்னாஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.