சினிமா நடன கலைஞர்கள் இருவருக்கு கத்திக்குத்து

சென்னை: வடபழனியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (41), விஜய் (38), நடன கலைஞர்கள்.இவர்கள், வடபழனி பகுதியில் குப்பை பொறுக்கி விற்பனை செய்யும் கருப்பு (35) மற்றும் சாய் சதீஷ் (32) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு  வடபழனி துரைசாமி சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும், மணிகண்டனை கருப்பு கேலி செய்துள்ளார். ஆத்திரமடைந்த மணிகண்டன் கருப்பை அடித்துள்ளார். அப்போது, கருப்பு  மறைத்து வைத்திருந்த  கத்தியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். தடுக்க முயன்ற விஜய்க்கும் சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து கருப்பு மற்றும் சாய் சதீஷ் அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த நடன கலைஞர்கள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிந்து, கருப்பு என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>