4 மீனவர்கள் சாவுக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் செந்தில்குமார் (32), நாகராஜ் (52), மெசியா (30), சாம் (28). இவர்கள் 4 பேரும் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம்,  கோட்டைப்பட்டினம் கடற்கரையில் இருந்து கடந்த 18ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களை  இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கி, தீவைத்து எரித்து கொன்றனர். கருகிய நிலையில் 4 பேரின் உடல்களும் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக  மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனிடையே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் தங்கச்சிமடத்தில் காலவரையற்ற  உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

>