சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

ஊத்துக்கோட்டை: எண்ணூர் பகுதியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவரான சக்ரவர்த்தி(40), டேங்கர் லாரி ஒன்றில் குருடாயில் ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்றார். அப்போது, தாமரைப்பாக்கம் அருகே வெள்ளியூர்  பகுதியில் அரசு பள்ளி அருகே நள்ளிரவு 2.30 மணிக்கு சென்றபோது சாலையில் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் லாரி மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  அவர்கள் வந்து லாரியில் இருந்து கீழே கொட்டிய ஆயிலால் தீ விபத்து ஏற்படாமல் இருக்க ஆயில்  மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பின்னர், நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

Related Stories:

>