தமிழக - ஆந்திர எல்லையில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆந்திர எல்லையில் தோக்கமூர் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழக பகுதி உள்ளது.  இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருக்கு  சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடுகளை  செய்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த இடத்தில் இருந்து சுமார் 4.கி.மீ. தொலைவில் உள்ள காரூர் என்ற ஆந்திர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000 பேர் இந்த டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று  கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  

தகவலறிந்த ஆரம்பாக்கம்  காவல் துணை ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் தரப்பில், “இந்த இடத்தில் டாஸ்மாக் கடை  அமைந்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இடையூறாக இருக்கும்” என்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் அங்கிருந்து   கலைந்து சென்றனர்.

Related Stories:

>