ஜனவரி 26-ம் தேதி பகல் 12.00 மணிக்கு திமுக எம்பி-க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜனவரி 26 ம் தேதி பகல் 12.00 மணிக்கு திமுக எம்பி-க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம்,  ‘முரசொலி மாறன் வளாகத்தில்’  உள்ள கூட்ட அரங்கில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுபோது, கழக மக்களவை  - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும்  தவறாது  கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Related Stories: