5ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா காரைக்காலில் அரசு பள்ளி மூடல்

காரைக்கால்: ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காரைக்காலில் அரசு பள்ளி மூடப்பட்டது. கொரோனா  ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்  தொற்று குறைந்ததால் புதுச்சேரி அரசின் உத்தரவுபடி கடந்தாண்டு அக்டோபர் 8ம்  தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9, 10,11 மற்றும் 12ம்வகுப்புகளுக்கு  சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் துவக்கி நடத்தப்பட்டன. அதன்பின்னர்  அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து  நீடித்து வரும் நிலையில், மாணவர்களின் உயிரை பணயம் வைக்க கூடாது, பள்ளிகளை  திறக்க கூடாது என்று காரைக்காலில் உள்ள பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள்,  அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை  விடுத்து வந்தனர்.

ஆனால் அதை செவிகொடுத்து கேட்காமல் புதுச்சேரி அரசு,  பள்ளிகளை திறந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டம்  திருநள்ளாறு அருகில் உள்ள வளத்தாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம்  வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த  பள்ளி நேற்றுமூடப்பட்டது. அந்த பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள்,  ஆசிரியர்களுக்கு வரும் 23ம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தவுள்ளதாக காரைக்கால்  மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: