தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்பு!: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளதாக உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்தார். கால்நடை பராமரிப்பினை ஊக்குவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். நோய் கட்டுப்படுத்துதல், இனப்பெருக்க வசதி, தீவன மேலாண்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதி கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories:

>