×

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிவு

சென்னை: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிந்து இருப்பதாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. கார்களுக்கான விலை உயர்வு, மக்களின் குறைந்த செலவழித்து திறன் உள்ளிட்ட காரணங்களால் 2015 -2020 ஆண்டு கார்களின் விற்பனை வளர்ச்சி 1.3 % மட்டுமே உயர்ந்துள்ளது.

2005 - 2010 ஆண்டுகளுக்கு இடையில் SUV உள்ளிட்ட கார்களின் கூட்டு விற்பனை வளர்ச்சி 13%-மாக இருந்தது. இது அடுத்த 2010-2015  ஐந்தாண்டு தொகுதியில் 6%-மாக குறைந்து, இப்போது 1.3%-மாக தேய்ந்துள்ளது. 2000 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் உறுதியான பொருளாதாரம், புதிய மாடல்கள் அறிமுகம், கலால் வரி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் விற்பனை அதிகரித்ததாக கூறும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்.

அதற்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை மற்றும் உயர்த்தப்பட்ட வாகனங்களின் விலையால் கார் விற்பனை வீழ்ச்சியை சந்தித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒழுங்குமுறை விதிமுறைகள் மாற்றம், ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவையும் 2015-ம் கார்களின் விற்பனை மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பரவலும் சமீபத்தைய வாகன விற்பனை வளர்ச்சியை பாதித்துள்ளது.

பி.எஸ்-4, பி.எஸ்-6 இன்ஜின் ஒழுங்குமுறைகள், வரி, காப்பீடு, சாலை வரி மற்றும் கச்சா பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் வாகனத்தின் விலை கடுமையாக குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் கார்கள் மற்றும் SUV-களின் ஆன் ரோடு விலை 60% அளவுக்கு உயர்ந்துள்ளதாக மாருதி சுசூக்கி இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : India , In the last 5 years in India, car sales have declined to a level not seen in 20 years
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...