கரூர் நகராட்சி பிரதான சாலையில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம்-வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர் : கரூர் நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கரூர் நகராட்சியை சுற்றிலும் உள்ள சில பகுதி சாலையோரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் குப்பைகளை கொட்டி வைத்து தீயிட்டு எரிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுவதோடு, விபத்துகளிலும் சிக்க நேரிடுகிறது. மேலும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகின்றனர்.

மேலும், பஞ்சமாதேவி அருகம்பாளையம் சாலையிலும் இதுபோல அவ்வப்போது குப்பைகள் எரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே, குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்கில் கொண்டு செல்லாமல் இதுபோல எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: