திருவாரூர் நகராட்சிக்கு ரூ.45 லட்சத்தில் பாதாள சாக்கடை கழிவு அகற்றும் நவீன ரக ரோபோ-ஓஎன்ஜிசி வழங்கல்

திருவாரூர் : திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான தானியங்கி சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மேலும் மனித கழிவே மனிதன் அல்லும் அவலத்தை போக்கும் நோக்கில் திருவாரூர் நகராட்சிக்கு ரூ.45 லட்சத்தில் பாதாள சாக்கடை கழிவு அகற்றும் நவீன ரக ரோபோ இயந்திரம் ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்பட்டது. இதனை அசட் மேனேஜர் அனுராக் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொ) சண்முகம், ஓஎன்ஜிசி குழும பொது மேலாளர்கள் செபாஸ்டின், விஜய்ராஜ், முதன்மை பொதுமேலாளர் மாறன், பொது மேலாளர்கள் சிவக்குமார், கோபிநாத், அன்பரசு, ஒருங்கினைப்பாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த ரோபோடிக் இயந்திரத்தை ஹேன்ட் இன் ஹேன்ட் நிறுவனம் வடிவமைத்த நிலையில் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அமுதசேகரன், தலைமை பொறியாளர் ஜெய்சிங்க் ரோபோடிக் செயல்முறை விளக்கத்தினை ஊழியர்களுக்கு வழங்கினர். இதே போன்று கடலூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரம் நகராட்சிகளுக்கு ஓஎன்ஜிசி சார்பில் இந்த ரோபோ வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: