கோடியக்காடு வன பகுதியில் பூத்து குலுங்கும் ஆவாரம் பூக்கள்

வேதாரண்யம் : வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனப்பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த ஆவாரம் பூக்கள் பூத்து குலுங்குகிறது.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு வனப்பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகள் இயற்கையாகவே வளர்ந்துள்ளது. இதில் முக்கியமாக ஆவாரம் பூ செடி என்பது மஞ்சள் பூக்களை கொண்ட செடியாகும்.

இந்த செடிகளில் உள்ள பூ மற்றும் இலைகள் சர்க்கரை நோய்க்கு மிகவும் ஏற்றது. இந்த ஆவாரம் செடிகளை மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் கட்டுவதற்காக கொத்துக்கொத்தாக ஒடித்து வந்து ஆவாரம் பூ இலை கொத்து, நெல்லி தலை கொத்து ஆகியவற்றை மாலையாகத் தொடுத்து மாட்டின் கழுத்தில் கட்டுவார்கள்.

இதனால் மழைக்காலம் முடிந்து வெப்பம் அதிகரிக்கும். தை மாதம் தொடங்குவதால் மழைக்கால நோய்களில் இருந்து விடுபடவும், கால்நடைகளுக்கு நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு இந்த மூலிகை செடியான ஆவாரம் இலை, நெல்லி இலைக் கொத்துக்களும் கட்டப்படுகிறது.

இதனை கால்நடை உண்ணுவதால் அவற்றுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் ஏற்பட்டு தொற்றுநோய் பரவாமல் இருக்கும் என கருதியே பண்டையகாலம் முதல் மாட்டுப் பொங்கலில் மூலிகை செடிகள் மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிறது.

Related Stories: