இலங்கை போதைப்பொருள் கும்பல் தலைவன், அவரது கூட்டாளிகள் சென்னையில் கைது!: போலீசார் நடவடிக்கை..!!

சென்னை: இலங்கை போதைப்பொருள் கும்பலை சேர்ந்த தலைவன், அவரது கூட்டாளி ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நவாஸ், அவரது கூட்டாளி முகமது அஃப்னாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்தாண்டு நவம்பரில் தூத்துக்குடி அருகே இலங்கை படகில் இருந்து 100 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 18 கிலோ மெத்தபெட்டமைன், துப்பாக்கிகளும் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதான இருவரும் 10 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல் தமிழத்தில் இருந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>