திருவலம் அடுத்த கெம்பராஜபுரம் ஏரி குடிமராமத்து பணிகளை தமிழக கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு-பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திருவலம் : திருவலம் பேரூராட்சி கெம்பராஜபுரம் மற்றும் சுற்றுபுற பகுதி ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தமிழக கண்காணிப்பு பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பராஜபுரம் மற்றும் சேர்க்காடு, கண்டிப்பேடு  ஏரிகளில் கடந்த சில மாதங்களாக குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

இதனை தமிழக நீர் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் எம்.மன்மதன் ஏரிகளில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து சீராக முடிக்க வேண்டும் என்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் எம்.சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் குணசீலன், விஸ்வநாதன், உதவிப்பொறியாளர்கள் கோபி, சம்பத் மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் உடனிருந்தனர்.

Related Stories: