தொடர்ந்து மழை பெய்தும் 95 சதவீத கண்மாய் குளங்களில் தண்ணீர் இல்லை

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதியில் தொடர் மழையினால் 95சதவீத கண்மாய் குளங்கள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றது.

புதுக்கோட்டை மாட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடர் மழை மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால் இப்பகுதி சேறும் சகதியுமாக காணப்பட்டது. இந்த மழையினால் மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, கேசராபட்டி, பகவாண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலன கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியது. மற்ற பகுதிகளில் அவ்வளவாக தண்ணீர் இன்றியும் மிக குறைவான தண்ணீர் மட்டுமே கிடக்கின்றது.

கண்டியாநத்தம், ஆலவயல், அம்மன்குறிச்சி, கல்லம்பட்டி, நகரப்பட்டி காரையூர், மேலத்தானியம், ஒலியமங்களம், நல்லூர், கூடலூர், செம்பூதி, செவலூர், திருக்களம்பூர், வேந்தன்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில குளங்கள் தண்ணீர் இன்றியும் ஒரு சில இடங்களில் குறைவான தண்ணீரும் கிடக்கின்றது.

Related Stories:

>