கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆட்டு சந்தை ஏலம் கனஜோர்

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் நடைபெறும் ஆட்டு சந்தைக்காக, கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சியின் சார்பில் சேவை மைய வளாகத்தில் ஆட்டு சந்தை ஏலம் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமையில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மேரி ஏலத்தை துவக்கி வைத்தார்.

ஏலம்  எடுக்க  அந்த கிராமத்தில் உள்ள 14 பேர் டெபாசிட் தொகை ரூ 2 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தனர்.

ஏலத்தொகை ரூ.13லட்சத்து 23ஆயிரத்து 300 என்று நிர்ணயம் செய்த பின்னர் ஒரு  வருடத்திற்கான  ஏலம்  எடுப்பதற்கு கேள்வி நேரம் வழங்கப்பட்டது.ஏலம் ஆயிரம் ஆயிரமாக உயர்ந்து ரூ.13,லட்சத்து 55 ஆயிரத்திற்கு  மணிமாறன்  என்பவர் ஏலத் தொகை கட்டி எடுத்தார்.

இதில் துணை தலைவர் சதீஷ் குமார்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>