கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று அகழ்வாராய்ச்சி பகுதியில் ஆளில்லாத விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் பகுதிகளில் தரைக்கு கீழ் உள்ள கனிம வளங்கள் பற்றி ஆளில்லாத விமானம் மூலம் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளன.தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகலை மற்றும் கொடுமலையை தொடர்ந்து தற்போது 3 பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி துவங்க உள்ளது.

இதில் கைங்கை கொண்டசோழபுரம் பகுதியும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அரண்மனை அமைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் 1980, 81, 85, 87, 91 ஆகிய ஆண்டுகளில் பல கட்டமாக அகழ்வாராய்ச்சி பணி மேலோட்டமாக நடைபெற்றது. இந்த ஆராய்ச்சியில் 31 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றி உள்ள ராஜேந்திரசோழன் ஆண்ட பல்வேறு பகுதிகளான மாளிகைமேடு, மண்மலை, கல்குளம், குருவாலப்பர் கோவில், பொன்னேரி மதகு உள்ளிட்ட பகுதிகளில் 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த அகழாய்வில் பானை மற்றும் கூரை ஓடுகள், இரும்பால் ஆன ஆணிகள், அலங்காரம் செய்யப்பட்ட கற்கள், வளையல் துண்டுகள், மணிகள், யானை தந்தத்தால் ஆன பொருட்கள், நாணயங்கள், அச்சுகள், மண்பாண்ட ஓடுகள், சீன நாட்டு ஓடுகள், பல அப்போது கண்டெடுக்கப்பட்டது.

இதை இன்னும் தீவிரம் படுத்தும் பணி தற்போது துவங்கி உள்ளனர்.அதன் நடவடிக்கையாக கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிக்காக இன்று (22ம்தேதி) ஆளில்லாத விமானம் மூலம் தரைப் பகுதியில் அமைந்துள்ள பொருட்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 இடங்களில் பிப்ரவரி இரண்டாம் வாரம் துவங்க உள்ளது. நாளை (இன்று) முதல் ஆளில்லா விமானம் மூலம் ஆராய்ச்சி பணி துவங்க உள்ளதாகவும்‌, மேலும் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி அகழ்வாராய்ச்சி நடத்த உள்ளதாகவும் . இதனை தொடர்ந்து இந்த பணி கங்கை கொண்ட சோழபுரம் சுற்றி உள்ள பகுதிகளில் ஆயுதகளம், மண்மலை, மாளிகை மேடு உள்ளிட்ட 6 இடங்களில் பணி துவங்க உள்ளதாக தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி இணை இயக்குநர் சிவானந்தம் தகவல் தெரிவித்தார்.

Related Stories: