நாய்கள் துரத்தியதால் சுவரில் மோதி மான் பரிதாப பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, கை.களத் தூர், காரியானூர், பில்லங் குளம், அய்யனார் பாளையம், மேட்டுப்பாளையம், ரஞ்சன்குடி, சித்தளி, பேரளி, நாவலூர், இரட்டைமலை சந்து, குரும்பலூர், சத்திரம னை, பாடாலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட வனத்துறை கட்டுப் பாட்டிலுள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள காப்புக் காடுகளில் அரியவகைப் புள்ளி மான் கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றன.

இவை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனப் பகுதியை விட்டு வெளியேறி வயல்களில் திரியும்போது கிணறுகளில் தவறிவிழுந்து இறப்பதும், சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி இறப்பதும், ஊரு க்குள் நுழையும்போது தெரு நாய்களிடம் கடிபட்டு இறப்பதும் வாடிக்கையாக உள்ளன.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிப் பகுதியிலிருந்து வந்து, கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றித் திரிந்த 2 வயது மதிக்கத்தக்க பெண்மான்ஒன்று, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழி யிலுள்ள குடியிருப்புகளில் புகுந்தது. அங்கு மானைப்பார்த்த தெருநாய்கள் அத னை துரத்திக் கடிக்கப் பாய்ந்தன. இதனால் மிரண்டு போன மான் தப்பிப் பிழைக்க நினைத்து தலைதெறி க்க ஓடியபோது அப்பகுதி யிலுள்ள வீட்டு சுவற்றில் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மானை தெரு நாய்கள் விரட்டியதை கண்ட அப்பகுதியினர் பெரம்பலூர் தீயணைப்புத்துறைக்குத் தெரிவித்தனர். இதன் பேரில் தீயணைப்புத்துறையின் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து சுவற்றில்அடிபட்டுவிழுந்து கிடந்த மானை மீட்டு பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் உத்தரவின்பேரில் வனச் சரகர் சசிகுமார் வனவர் குமார், வனக் காப்பாளர் ராஜு உள்ளிட்டோர் மானை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். கால்நடை மருத்துவர் நேரில்வந்து சிகிச்சைஅளிக்கும் போதே பலத்த காயம்பட்டிருந்த மான் பரிதாபமாக இறந்தது.இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்கு பின் பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோ வன் உத்தரவின்பேரில் சித்தளி காப்புக்காடு பகுதியில் மாணின் சடலம் புதைக்கப்பட்டது.

Related Stories:

>