கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடற்படை அதிகாரிகள் விழிப்புணர்வு ஓட்டம்

கோவை :  தொற்று இல்லாத நோய்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராம் ரத்தன் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய 2 கடற்படை அதிகாரிகள் ‘கே2கே ரன் 2021’ எனும் விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி உள்ளனர். இந்த ஓட்டத்தை இவர்கள் தேசிய இளைஞர் தினமான ஜனவரி மாதம் 12ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினர்.

இந்த ஓட்டம் தேசிய பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி காஷ்மீரில் நிறைவுபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 4,431 கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் 56 நாட்களில் கடக்க உள்ளனர். இந்த ஓட்டத்தில் 91 நகரங்கள், 1000 கிராமங்களை கடந்து செல்கின்றனர்.

Related Stories:

>