கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி முருகன் கோவில் தைப்பூச விழா .: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

பழனி: முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனையொட்டி அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் வேதமந்திரங்கள் முழுங்கள் கொடியேற்றப்பட்டது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண நிகழ்ச்சி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்க்கு அடுத்த நாள் நடைபெறும் தேர்ரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related Stories:

>