துபாயில் இருந்து ஆசனவாயில் ரூ.44 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தி வந்தவர் கைது: சுங்க அதிகாரிகள் அதிரடி

மங்களூரு: துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணி ஒருவர் தனது ஆசன வாயில் ரூ.44  லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்ததை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், மடிக்கேரியை சேர்ந்தவர்  உபயத் பலியாத், துபாய் சென்றிருந்த அவர் நேற்று காலை ஏர் இந்தியா  விமானத்தில் துபாயில் இருந்து மங்களூரு பஜ்பே விமான  நிலையம் வந்தார்.  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவர் தங்கம் எதுவும் கடத்தவில்லை  என்று மறுத்தார். அவர் உடலை முழுமையாக ஸ்கேனிங் செய்தபோது, தனது ஆசன வாயில்  பேஸ்ட் வடிவில் தங்கம் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக டாக்டர்களை  வரவழைத்து ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை மீட்டனர். இதில் 800  கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.44.22 லட்சம் என்று சுங்க  அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

Related Stories:

>