சகுனிரங்கநாத கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை வசூல்

சிக்கமகளூரு: வனப்பகுதியில்  அமைந்துள்ள சகுனிரங்கநாத கோவில் உண்டியலில் ரூ. 11 லட்சம் காணிக்கை  கிடைத்தது என்று தாலுகா அதிகாரி

ஜெகதீஷ் தெரிவித்தார். சிக்கமகளூரு  மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்ணா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள்  சகுனிரங்கநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள்  மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.

அப்படி வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறினால் சாமிக்கு காணிக்கை செலுத்துவார்கள். இந்நிலையில்  இந்த ஆண்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன் கோவில் திருவிழா நடந்து  முடிந்தது கொரோனா பாதிப்பு கராணமாக குறைந்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி  வழங்கப்பட்டது. அப்படி வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய காணிக்கை  நேற்று காலை தாசில்தார் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரூ. 11 லட்சம்  காணிக்கை கிடைத்துள்ளது என துணை தாசில்தார் ஜெகதீஷ் தெரிவித்தார்.

Related Stories:

>