வாழை பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சாம்ராஜ்நகர்: காட்டு யானைகள் நாசம் செய்துள்ள வாழை தோட்டங்களின் உரிமையாளர்கள் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டை தாலுகா ஓம்கார் வனப்பகுதியை ஒட்டியுள்ள அஞ்சிபுரா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராஜசேகர்மூர்த்தி, திவாகர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வாழை பயிரிட்டு பராமரித்து வந்தனர். இவை தற்போது அறுவடைக்கு தயராக உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நிலத்தில் புகுந்த 5 காட்டு யானைகள் வாழை செடிகளை நாசம் செய்தது. இதில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் யானைகள் நாசம் செய்த வாழை செடிகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ``கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வங்கியில் கடன் பெற்று தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளனர். இவை அறுவடைக்கு தயராக இருந்த நேரத்தில் காட்டு யானைகள் நாசம் செய்துள்ளது. இதில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு யானைகள் நாசம் செய்துள்ள வாழை தோட்டத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  அதே போல் காட்டு யானைகள் கிராம பகுதியில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே விவசாயிகள் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

Related Stories:

>