வாகனங்களின் பயன்பாடு குறைந்ததால் பெங்களூரு நகரில் குறைந்து வரும் காற்றுமாசு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்றுக்கு பின்னர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில் நகரில் காற்றின் தரம் நன்றாக உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரு நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சுமார் 10 இடங்களில் காற்றின் தரத்தை கணக்கிட்டது. அதில் வியக்க வைக்கும் வகையில் தரவுகளின் அளவு இருந்தது. காற்றின் தரம் திருப்தியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் தரம் மைசூரு சாலையில் மிதமான மற்றும் சானேகுருவனஹள்ளியில் நன்றாகவும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் காஜா கூறுகையில், சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தது காற்றின் தரத்தை மேம்படுத்த உதவியது. காற்று தர குறியீடு திருப்திகரமாக இருப்பதற்கு, கொரோனா தொற்று பொதுமக்களை வீட்டுக்குள்  முடக்கியதும், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததுமே காரணம்.  வழக்கமாக நகரில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடும்,  ஆனால் தற்போது சுமார் 40 சதவீதம் வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. பெங்களூரு நகரின் மாசுபாட்டிற்கு டீசல் வாகனங்களின் பங்கு 18 சதவீதமாக இருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய மாசுபாட்டைக்குறைக்க சில சாதனங்களை கொண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. 2019-ம் ஆண்டை காட்டிலும் சுமார் 18 முதல் 20 சதவீதம் வரை மாசுபாடு குறைந்துள்ளது.  

மரக்கன்றுகளை நடவு செய்யுமாறு கேஎஸ்பிசிபி சார்பில் மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. காற்று மாசு சகிப்புத்தன்மை குறியீடு தொடர்பான இந்திய தோட்டக்கலை துறையின் ஆய்வு படி சில தாவரங்கள் மாசின் அளவைக் குறைக்க உதவுகிறது என்றார். இதுதொடர்பாக விஞ்ஞானி செஹச்பி சுமங்கலா கூறுகையில், பல தாவரங்கள் மாசுகளை உறிஞ்சி காற்றை சுத்திகரிக்கும். மைக்கேலியா சாம்பாக்கா, டோலிசாண்ட்ரோன் பிளாட்டிகாலிக்ஸ். காசியா  ஸ்பெக்டபிலிஸ் மற்றும் தபேபூயா ஆரியா போன்ற சில தாவரங்கள் அதிக சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன.

நகரத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மொத்தம் 35 மர இனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சமனேயா சமன்  பரவலாக விநியோகிக்கப்படுவது கண்டறியப்பட்டது.  65 மரங்களால் உறிஞ்சப்படும் கார்பன்டை ஆக்சைடை ஒரு சமனேயா சமன் மரம் உறிஞ்ச வல்லது என்றார். சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை  வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தது காற்றின் தரத்தை மேம்படுத்த  உதவியது. காற்று தர குறியீடு திருப்திகரமாக இருப்பதற்கு, கொரோனா தொற்று  பொதுமக்களை வீட்டுக்குள் முடக்கியதும், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததுமே காரணம் 

Related Stories: